Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ... திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம்! திருத்தணி முருகன் கோவிலில் 1,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
10:04

பழநி : தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, பழநியில் நேற்று அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பழநியில் மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்கள், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உள்ளூர்,வெளியூரை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி மலைக்கோயிலில், பக்தர்கள் பால்குடங்கள், தீர்த்தகாவடி எடுத்தும், வெளிப்பிரகாரத்தை வலம் வந்து, தண்டாயுதசுவாமிக்கு நேர்த்திகடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். மலைக்கோயிலில் பொதுதரிசனம் மற்றும் வி.ஐ.பி., கட்டணவழி உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணிநேரம் காத்திருந்து மூலவர் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.தாடிக்கொம்பு: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெருமாள்சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அபிஷேக நாணயம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பவுர்ணமியை முன்னிட்டு மாலை 7 மணியளவில் லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பால், சந்தனம், இளநீர், திருமஞ்சணம், பன்னீர் ஆகிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடைக்கானல்: குறிஞ்சி ஆண்டவர் கோயிலில், தங்க கவசம் அணிந்து காட்சியளித்த முருகப்பெருமானை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar