Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டை முன்னிட்டு பழநியில் ... திருமலை திருப்பதியில் வசந்தோற்சவம் நிறைவு விழா! திருமலை திருப்பதியில் வசந்தோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஏப்
2014
10:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, உற்சவ பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர்.  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, 1,008 பால்குட அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை, 9:30 மணிக்கு, நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்திலிருந்து, 1,008 பால்குட ஊர்வலத்தை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு, நகரின் முக்கிய வீதிகளில் வந்து, மலைப்படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவ பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. பின், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

திருவிளக்கு பூஜை: மாலை, 6:00 மணிக்கு, மலைக்கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். முன்னதாக மூலவருக்கு, அதிகாலை, 4:45 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று, புத்தாண்டு முன்னிட்டு, அதிகாலை முதல் இரவு 9:00 மணி வரை, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நடனமாடும் கோலத்தில் பல தெய்வங்கள் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
மைசூரு: ‘‘மைசூரு தசரா விழாவை, கொப்பால் கவி மடத்தின் மடாதிபதி அபிநவ கவி சித்தேஸ்வர மஹாசுவாமிகள் துவக்கி ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழாவின் இரண்டாம் நாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar