கண்டமங்கலம்: கண்டமங்கலம் பாலமுருகன் கோவிலில் 14ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு வினாயகர், மூலவர், உற்சவர் மற்றும் பரிவாரங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 10ம் தேதி காவடி, பால்குடம் எடுப்பவர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி பாலமுருகன் கோவிலில் நேற்று முன்தினம் காவடி பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கோவிலில் இருந்து புஷ்பத்தேர், காவடிகள், பால்குடங்கள் புறப்பட்டது. பகல் 12 மணிக்கு புஷ்பத்தேர், காவடிகள் மற்றும் பால்குடங்கள் கோவிலை சென்றடைந்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.