பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக தினத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் நிர்வாக அறங்காவலர் சுந்தரம் தலைமை வகித்தார். முன்னதாக பெண்களுக்கு குங்குமபிரசாதம், பூக்கள் மற்றும் பூஜைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டன. திருவிளக்கு வழிபாட்டு பூஜை குறித்தும், அதனால் பெருகும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் மாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருவருள் தவநெறி மன்றத்தினர் செய்திருந்தனர்.