பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
02:04
கருமத்தம்பட்டி : உலக நலன் வேண்டி, 1008 திருவிளக்கு பூஜை கருமத்தம்பட்டியில் நடந்தது.தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் கொள்ளுப்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், உலக நலன், ஆன்மிக எழுச்சி வேண்டி, ஒன்பதாம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை சங்கோதிபாளையம் பிரிவில் நடந்தது. இயக்கத்தலைவர் சம்பத்குமார் வரவேற்றார். அலகுமலை ஸ்ரீ தபோவன நிறுவனர் சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி பேசுகையில், பெண்களால்தான் நாட்டில் ஆன்மிக எழுச்சியை உண்டாக்கமுடியும், என்றார்.ஆன்மிக பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு விவேகானந்தரும் இந்திய பெண்மையும் எனும் தலைப்பில் பேசுகையில்,சிறுவயது முதலே விவேகானந்தரின் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்தவர் அவரது தாயார் புவனேஸ்வரி. சுவாமிஜியின் கொள்கைகளையும், ஆன்மிக கோட்பாடுகளையும் நாடு முழுக்க பரப்பிய சீடர் நிவேதிதா. அயல்நாட்டை சேர்ந்தவராயினும் இந்துமதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சுவாமிஜியின் சீடரானவர். அவரைத்தான் நமது மகாகவி பாரதியார் தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார். அவர்களை போன்ற எத்தனையோ பெண்கள் தியாக சீலர்களாக வாழ்ந்துள்ளனர். அவர்களை பற்றி நமது குழந்தைகளுக்கு கூறி வளர்க்கவேண்டும், என்றார். *உலக நலன், ஆன்மீக எழுச்சி வேண்டி, ஒன்பதாம் ஆண்டு 1,008 திருவிளக்கு பூஜை சங்கோதிபாளையம் பிரிவில் நடந்தது.