இளையான்குடி : தெற்கு கீரனூர் வரத விநாயகர் கோயிலில் , கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் திருவேங்கடம் பட்டர் , பரமக்குடி குமார் குருக்கள் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர் . தெற்கு கீரனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.