குலசேகரம் ; குமரி மாவட்ட எல்லைப் பகுதியான பத்துகாணி காளிமலை கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெüர்ணமியன்று ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். தொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமமும், பின்னர் காணியின தலைவர்களுக்கு பூரண கும்ப மரியாதை உள்ளிட்டவையும் நடைபெற்றன. தொடர்ந்து தந்திரி மகேஸ்வரன் முதல் அடுப்பில் தீ மூட்டி பொங்கல் வழிபாட்டைத் தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்பாளை வழிபட்டனர்.