திருச்செங்கோடு தொண்டிக்கரடு மாரியம்மன் கோவில் விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபாடுகள் செய்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி சிறப்பு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.