Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மாரியம்மன் கோவிலில் இன்று ... ஸ்ரீபெரும்புதூரில் சேஷ வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள்! ஸ்ரீபெரும்புதூரில் சேஷ வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி: பாலாற்றில் நடவாவி உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஏப்
2014
11:04

காஞ்சிபுரம்: சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடவாவி உற்சவத்தில், வரதராஜ பெருமாள் பாலாற்றில் எழுந்தருளினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமிக்கு முதல் நாள் கோவிலிருந்து புறப்பட்டு, ஐயங்கார் குளம் சஞ்சீவராயர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பின் அங்குள்ள நடவாவி கிணற்றில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு பாலாற்றங்கரையில் நள்ளிரவு 12:30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு திருஊரல் பத்தி உலாத்தல் உற்சவம் நடந்தது. அதன்பின் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பெருமாள் எழுந்தருளும் சித்திரை நடவாவி உற்சவத்தில் வழக்கமாக பாலாற்றில் மூன்று அடி தோண்டினாலே தண்ணீர் வரும். அப்போது பெருமாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால், இந்த ஆண்டு பத்தடிக்கு மேல் ஊரல் தோண்டியதால் களிமண்ணில் தண்ணீர் ஊற்று இருந்தது. களிமண் தண்ணீரில் பெருமாளை சுமந்து சுற்றி வர முடியாமல், ஒரு முறை மட்டும் சுற்றப்பட்டது. ஆற்றில் மணலும் இல்லை தண்ணீரும் இல்லை. எதிர் காலங்களில் இதுகூட இருக்குமா என்றபடி, பக்தர்கள் கவலையுடன் கலைந்து சென்றனர். நேற்று முன்தினம் இந்த உற்சவம் முடிந்த பின் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு காஞ்சிபுரம் கோவிலுக்கு திரும்பினார். நாளை தோட்ட உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar