Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹஜ் பயணிகள் தேர்வு : 21ல் சென்னையில் ... போடி பரமசிவன் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து, முஸ்லிம் மக்களிடையே பாரம்பரிய சமூக நல்லிணக்க விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2014
12:04

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் கிராமத்தில், ஹிந்து, முஸ்லிம் சமுதாய மக்களின், சமூக நல்லிணக்க விழா நடந்தது. ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 3ம் தேதி துவங்கி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (16ம் தேதி), மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், பாரம்பரியமாக ஹிந்து, முஸ்லிம் சமுதாய பெரியவர்கள், சந்தனம் பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளி வாசலைச் சேர்ந்த, ஹனிபா தலைமையில், இஸ்லாமியர்கள், குருசாமிபாளையம் வந்தனர். அங்குள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் இருந்து, வெள்ளை கொடி ஏந்தி, மேளம் வாத்தியம் முழங்க, வீடு மற்றும் கடைகளின் சுவர்களில் சந்தனத்தை பூசினர். பின்னர், செங்குந்தர் பாவடி மைதானத்தில் உள்ள, சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடியை ஏற்றினர். அப்போது, ஊர் பெரியதனக்காரர் கணபதி கைகளில், ஹனிபா சந்தனம் பூசினார். பின்னர் அவருக்கு, கணபதி சந்தனம் பூசினார். ஒருவருக்கு ஒருவர் பூ மாலையை மாற்றிக் கொண்டனர். "பாத்தியா ஓதி முஸ்லிம்கள், அங்கிருந்த மக்களுக்கு நாட்டுச் சர்க்கரை மற்றும் பொட்டுக் கடலை வழங்கினர். ஹிந்துக்கள், முஸ்லிம் மக்களுக்கு விருந்து கொடுத்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும், சமூக நல்லிணக்க நிகழ்ச்சி அப்பகுதி அனைத்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் ஹனிபா, இப்ராகிம் கூறியதாவது: குருசாமிபாளையம் பகுதியில், கைத்தறி நெசவு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலுக்கு, அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், "ஃபிளேக் நோயால் ஊர் மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது, முஸ்லிம் பெரியவர்கள், சென்டா மரம் எனக் கூறப்படும், புளிய மரத்தின் கீழ், நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, "பாத்தியா ஓதி பொட்டுக் கடலை மற்றும் நாட்டு சர்க்கரை கொடுத்தனர். அதனால் நோய் குணமானதாக, பெரியவர்கள் கூறிவருகின்றனர். ஒவ்வொரு பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு ஒரு வாரம் முன்பு, குருசாமிபாளையம் ஊர் பெரியவர்கள், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளிவாசலுக்கு, தேங்காய் பழம் தட்டுடன் வந்து, திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பர். அதன்பேரில், இரு சமுதாய மக்களிடையே, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar