கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் ஸ்ரீ சீதா ராம, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ராம நவமி விழா கடந்த 8ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 14ஆம் தேதி ஸ்ரீ சீதா திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. தொடர்ந்து, ராமர் பட்டாபிஷக விழா நேற்று நடைபெற்றது. மாலையில் பிரதான வீதிகள் வழியாக ஸ்வாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் இன்று தேதி இரவு 8 மணிக்கு சயன உற்சவமும், நாளை 19ஆம் தேதி மாலை 9 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், 20ஆம் தேதி ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமங்கள் நடைபெற உள்ளன.