கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2014 05:04
கும்பகோணம் : கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாண மஹோத்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு தங்க மங்களகிரியில் தாயார் புறப்பாடு நடைபெற்றது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் தாயார் புறப்பாடு நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய் கிழமையன்று இரவு பெருமாள்,தாயார் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை மாற்றி ஊஞ்சல் கண்டருளி, திருக்கல்யாண மகோத்சவம் நடைபெற்றது. புதனன்று திருக்கல்யாண விடையாற்றி விழா நடைபெற்றது. வரும் நாளை விழா நிறைவடைகிறது.