பதிவு செய்த நாள்
19
ஏப்
2014
11:04
குன்னூர் : குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் நேற்று முத்துப்பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்று கேரள சேவா சங்கம் சார்பில், 69வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.காலை 6:00 மணிக்கு துயில் உணர்த்தும் குண்டு வெடித்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10:00 மணிக்கு குன்னூர் துருவம்மன் கோவிலில் இருந்து கும்ப கலசம், பஞ்சவாத்தியம், பூக்காவடி, அம்பலவயல் காவடி, சிங்காரிமேளம், தேவி ரக்ஷõ மற்றும் முத்துரத காளைகளுடன் ஊர்வலமாக தந்திமாரியம்மன் கோவிலை அடைந்தது.அங்கு 108 குடம் பசும்பால், 108 இளநீர் மற்றும் பல்வேறு அபிஷேக பொருட்களுடன் அபிஷேகம் அலங்காரம் நடந்தது.மதியம் 12:30 மணிக்கு அபிஷேக பிரசாத விநியோகம், விநாயகர்கோவிலில் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் இருந்து அம்மன் முத்துப்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.விழாவில், புராணங்களில் கூறப்படும் சம்பவங்களான கம்சனை வதம் செய்யும் நிகழ்ச்சி, யானை மற்றும் தேவி ரக்ஷõவின் மகிஷாசுரவதம், ராமர், லட்சுமணர் மற்றும் கிங்காங் ஆகிய பிரம்மாண்ட புதுமை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.