பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
12:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில், அதிகாலையில், சிறப்பு திருப்பலி நடந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி, பிரார்த்தனை நடந்தது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவர்கள் சாம்பல் புதனான மார்ச், 12ம் தேதி முதல், 40 நாட்கள் தவக்காலம் துவுங்கினர். இநுஞூத தவக்காலம், நேற்று, ஈஸ்டர் திருநாளன்று முடிவடைந்தது. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளான புனித வெள்ளியன்று, கிறிஸ்துவர்கள் சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர். அன்று பெரும்பாலான வீடுகளில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மூன்றாம் நாளில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான நேற்று, ஈஸ்டர் திருநாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. கிருஷ்ணகிரி தூய அன்னை பாத்திமா திருத்தலத்தில் நடந்த திருப்பலியில் புத்தாடை அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பைஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக, வார்த்தை வழிபாடு புனித பைபிளில் இருந்த வாசிக்கப்பட்டது. இதேபோல், கிருஷ்ணகிரி சி.எஸ்.ஐ.,சர்ச், ஐ.இ.எல்.சி., சர்ச் உள்ளிட்ட கிறிஸ்துவ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில்,ஏராளமான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர். இதேபோல், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும், சிறப்பு திருப்பலி நடந்தது.