புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழாவின், 7ம் நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு, அலர்மேல்மங்கை தாயார் சமேத ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சாற்றுமுறையும், மாலை 6:00 மணிக்கு, முதலியார்பேட்டை மெயின்ரோட்டில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு ஊஞ்சல் நலங்கும் நடந்தது. இரவு 8:30 மணிக்கு ஸ்ரீபஞ்சராத்ர ஆகம முறைப்படி, ஸ்ரீநிவாசப்பெருமாள், அலர்மேல்மங்கை தாயாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.