பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
01:04
குறிச்சி : போத்தனுாரிலுள்ள சி.எஸ்.ஐ., யூனியன் சர்ச்சில், அசன பண்டிகை நேற்று நடந்தது. வெள்ளலுார் ரோட்டிலுள்ள சர்ச்சில், காலை 9.00 மணிக்கு, ஆராதனையை ஆயர் சாமுவேல் ஜான்சன் நடத்தினார். தொடர்ந்து, சிறப்பு செய்தி வழங்கப்பட்டது. இதையடுத்து, மதியம் 12.00 மணிக்கு சர்ச் வளாகத்தில், 2014ம் ஆண்டுக்கான அசன பண்டிகை விருந்து துவங்கியது. 620 கிலோ மட்டன், 900 கிலோ அரிசி, 2,000 வாழைக்காய்கள் மற்றும் இதர காய்கறிகள் சேர்த்து, மட்டன் குழம்பு, சாதம், காய்கறி கூட்டு, சாம்பார், ரசம் மற்றும் பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது. மாலை 3.30 மணி வரை நடந்த விருந்தில், நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.