பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
01:04
ஈரோடு: அரச்சாலையம்மன் கோவிலில் குண்டம் விழா, வரும், 29ம் தேதி நடக்கிறது.அரச்சலூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளுடன், கடந்த, 17ம் தேதி கம்பம் நடப்பட்டது. 20ம் தேதி கொடியேற்றப்பட்டது. விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது. விநாயகர் சிலை சின்ன தேரிலும், அம்மன் பெரிய தேரிலும் பவனி வந்தன. ஏராளமான பக்தர்கள், தேரைவடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, பொங்கல் விழா, மாவிளக்கு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு மற்றும் கொடி இறக்கத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. வரும், 29ம் தேதி அறச்சாலையம்மன் கோவிலில் குண்டம் விழாவும், மே, ஒன்றாம் தேதி தேரோட்டமும் நடக்க உள்ளது.