நாகர்கோவில் : புன்னைநகர் புனிதலூர்தன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 4-ம் தேதி வரை நடக்கும் விழாவில் நேற்று மாலை 6 மணிக்கு திருப்பலி, 6.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியை கோட்டாறு வட்டார முதன்மைப்பணியாளர் ஜாண்தமஸ்க் தலைமை வகித்து ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து திருப்பலி நடந்தது. இன்று முதல் 2-ம் தேதி வரை தினமும் காலை, மாலையில் திருப்பலி, ஜெயமாலை நடக்கிறது. 9-ம் திருவிழாவன்று காலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்துகொள்கிறார். தொடர்ந்து லூர்தன்னை ஆடிட்டோரியம் திறப்பு விழா நடக்கிறது. ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் மந்திரித்து ஆசி வழங்குகிறார். தொழிலதிபர் ஜேப்பியார் திறந்து வைக்கிறார். 4-ம் தேதி காலை 6 மணிக்கு ஆடம் பரக் கூட்டுத்திருப்பலி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஏ.ஆல்பர்ட், பங்குபேரவை தலைவர் டேவிட்சன், செயலாளர் வசந்திநெல்சன், பொருளாளர் ஈல்டாபோன்ஸ் துணை செயலாளர் அமிரதராஜ், கன்வீனர் ஆல்பர்ட் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.