சேத்துப்பட்டு கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2014 04:04
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பழம்பேட்டை கெங்கையம்மன் கோவில் புதுப்பிக்கப் பட்டு திருப்பணிகள் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் முன்பு யாக சாலை அமைத்து அதில் புனிதநீர் நிரப்பப்பட்ட108 கலசங்கள் வைத்து 3 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை யாகசாலையில் வைக்கப்பட் டிருந்த கலச புறப்பாடு நடந் தது.புனிதநீரை எடுத்து சென்று கோவில் மீதுள்ள கெங்கை யம்மனுக்கு ஊற்றி கும்பாபி ஷேகம் நடத்தினர். திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.