ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி தாண்டவமாடுகிறது. வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளதõல் மழை பெய்ய வேண்டி ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. பக்தர்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு பதிகத்தை மனம் உருகி பாடி கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.