கும்பகோணம் : கும்பகோணம் ஏஆர்ஆர் காலனியில் பாலக்காட்டு காளியம்மன் கோயிலில் 55-ம் ஆண்டு வசந்த பாலாபிஷேகம் கடந்த 25-ம் தேதி தொடங்கியது.அன்று மாலை திருமஞ்சன காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று கும்பகோணம் மகாமக குளத்திலிருந்து முனீஸ்வரர் வேல், சக்திகரகம், பால்குடம், அலகுகாவடி, அக்கினி கொப்பரையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தன. வரும் 30-ம் தேதி பாலக்காட்டு அம்மன் கோயிலிருந்து பச்சைக்காளி, பவளிக்காளியம்மன் புறப்பட்டு , திருநடன வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.