நாகை: நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள வெள்ளை விநாயகர் கோவிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காவிரி ஆற்றங்கரையில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து சங்கல்பம் செய்யப்பட்டு கலசபூஜை, விக்னேஷ்வரர் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மழைபெய்வதற்காக சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. பழங்கள், பால், சந்தனம், பன்னீர் மற்றும் 64 விதமான மூலிகைப் பொருட்கள், நாணயங்கள், பட்டு வேட்டி, பட்டு சேலை ஆகியவற்றை செலுத்தி 108 இளநீர், 108 லிட்டர் பால், தயிர், பழச்சாறு ஆகியவற்றை கொண்டு மகாபிசேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.