செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் கடந்த மாதம் 11ம் தேதி முதல் மண்டலாபிஷேக விழா நடந்து வந்தது. இதில் உபயதாரர்கள் மூலம் 48 நாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. வெங்கட்ரமணர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்தனர். பஜனை கோஷ்டியினரின் பஜனை நடந்தது. வழக்கறிஞர் பூபதி, கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் வைகை தமிழ், கண்ணதாசன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணி, ஒன்றிய தலைவர் ராமலிங்கம் மற்றும் செஞ்சி தாலுகா பஜனை கோஷ்டியினர் பங்கேற்றனர்.