மானாமதுரை ; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் நேற்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டும் மழை வேண்டியும் யாகம் நடைபெற்றது.ஆயிரக்கணக்கானோர் யாகத்தில் கலந்து கொண்டனர். யாகம் நிறைவடைந்து பூர்ணாஹூதி முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. அதன்பின் பிரத்யங்கிரா தேவிக்கு புனிதநீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், மகா தீபாரதானை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.