பெரம்பலூர் மதுரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2014 01:04
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று இரவு நடைபெறுகிறது.விழாவையொட்டி, காலை மூலவர் அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 11 மணியிலிருந்து 30-ம் தேதி காலை 10 மணி வரை பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது.தொடர்ந்து, , நாள்தோறும் இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் மே 14 வரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 15-ம் தேதி காலை நடைபெறுகிறது.