காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு ஸ்ரீ தங்கமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. நேற்று அம்பாள் அன்ன வாகனத்தில் புறப்பாடும் , தொடர்ந்து முக்கிய நிகழ்வாக மே 5-ம் தேதி தீமிதி விழா நடைபெறுகிறது. 6-ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நடத்தப்பட்டு 7-ம் தேதி விடையாற்றியில் அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.