நெல்லிக்குப்பம் : வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்மனி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனையும் நடந்தது. ஊஞ்சல் உற்சவத்தில் பாமா ருக்மனி சமேதராய் வேணுகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.