திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில், மழை வேண்டி யோக நரசிம்மருக்கு அணையா தீபம் ஏற்றப்பட்டது. நேற்று மாலை, சவுமியநாராயணப்பெருமாள் சன்னதியிலிருந்து,அணையா தீபம் எடுத்து, வாத்திய கோஷங்களுடன், பக்தர்கள், ஆண்டாள் பாசுரம் பாடியபடி பிரகார வலம் வந்தனர்.பின்னர் கொடி மரம் அருகேயுள்ள, யோகநரசிம்மர் சன்னதியில் தீபம் வைத்தனர். மழை பெய்து, வளம் பெருகும் வரை, தீபம் அணையாமல் ஏற்றப்படும். பின்னர், ஆண்டாள் சன்னதிக்கு தீபம் எடுத்துச் செல்லப்படும்.