வத்திராயிருப்பு : சுந்தரபாண்டியம் வைகுண்டமூர்த்தி சுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது. இந்த ஆண்டுக்கான விழா, கோயில் திருப்பணிக்குழு தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் துவங்கியது. இருநாட்கள் நடைபெறும் கோயில் விழாவில், சுவாமி வீதி உலா, காவடிபூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. முதல் நாளில் கணபதி ஹோமம், ருத்ரஹோமம், சண்டிஹோமம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலையில் வைகுண்டமூர்த்தி அய்யனார் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக அலங்கார சப்பரத்தில் எழுந்தருளினார். கோயில் முன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வீதி உலா நடந்தது. இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மறுநாள் காவடிபூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டைஎடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் அஜீத், திருப்பணிக்கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.