வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு நடு அக்கிரஹாரம் விட்டல்விஹார் மடத்தில், ருக்கமணி சமேத பாண்டுரங்கன் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. முதல்நாள் கிருஷ்ணதாஸ் குழுவினர் பஜனை வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, சாஸ்வத ஐஸ்வர்யா பரதநாட்டியம், 2ம் நாள் பாண்டுரங்க சுவாமிக்கு திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு வைபவம், சுவாமி, அம்பாள் வீதி உலா, சொற்பொழிவு நடந்தது. 3 ம்நாள் ருக்மணி திருக்கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம், அதை தொடர்ந்து பாண்டுரங்கன், ருக்மணி சிலை பிரதிஷ்டை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.