ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2014 12:05
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு, இத்திருவிழா நேற்று காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக மே 10ம் தேதி, காலை 10.30 மணிக்கு மேல் 10.55 மணிக்குள் மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணமும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. மே 12ம்தேதி இரவு, சுவாமி திரு வீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் மகேந்திரன், கோயில் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்து வருகின்றனர்.