பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
துறையூர்: துறையூர் காசி விஸ்வநாதர் ஸ்வாமி கோவிலில், ஸ்வாமி மீது சூரிய கதிர்கள் விழும் சிறப்பு தரிசன பூஜை, இன்றுடன் நிறைவு பெறுகிறது. துறையூர் பெரிய ஏரிக்கரை கீழ்புறம் உள்ள காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், 17, 18, 19ம் தேதிகளில், மூலவர் மீது சூரிய கதிர்கள் விழும் சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் காலை, 6.10 மணிக்கு சூரிய கதிர்கள், மூலவர் மீது விழும் பூஜை நடந்தது. நேற்று காலை, சூரிய பூஜை நடந்தது. ஆண்டுதோறும், மூன்று நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, காசிவிஸ்வநாதர் வழிபட்டு குழுவினர் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.