பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
திருப்பூர் :காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2000 செப்., 10ல் நடந்தது. 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகத்திற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, உபயதாரர்கள் நிதி மற்றும் கோவில் நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. ஐந்து நிலைகளை கொண்ட புதிய ராஜகோபுரம் 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வேலைப்பாடு மிகுந்த நிலைக்கதவு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், 90 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுப்பிரகார மண்டபம், 20 லட்சம் ரூபாய் செலவில் பாவுதளம், மண்டப தூண்கள், சுற்றுப்பிரகார பகுதிகளில் சுதைகள், பூதங்கள் 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர், பரிவார சன்னதி கள், கோவில் வளாகம் முழுவதும் 50 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசும் பணி என மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. திருப்பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு கள் நடந்து வருகின்றன.