மஞ்சக்கம்பை கோவிலில் குண்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2014 12:05
மஞ்சூர்:மஞ்சக்கம்பை மானிஹாடா எத்தையம்மன் சத்திய நாகராஜர் கோவிலில் நேற்று திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.மஞ்சூர் அருகே மஞ்சக்கம்பை மானிஹாடா எத்தையம்மன் சத்திய நாகராஜர் கோவிலில் நடப்பாண்டுக்கான 42ம் ஆண்டு பூ குண்டம் நிகழ்ச்சியையொட்டி நேற்று அதிகாலை கணபதி பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் அமைந்துள்ள எத்தையம்மன், சத்திய நாகராஜர் சன்னதிக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிப்பட்டனர். மதியம் 2:00 மணிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் மேற்கொண்டு வந்த ஏராளமான பக்தர்கள் கைக்குழந்தைடனும், உடல் ஊனமுற்ற பக்தர்கள் பக்தி பரவசத்தில் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.