பெண்ணாடம் : முருகன்குடி விநாயகர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்ணாடம் அடுத்த முருகன்குடி விநாயகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.