பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
பேரம்பாக்கம்: களாம்பாக்கம் நாகேஸ்வரர் கோவிலில், வரும் 4ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பேரம்பாக்கம் அடுத்துள்ளது களாம்பாக்கம். இங்கு, பல்லவ மன்னர்களால், கி.பி., 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட மரகதவல்லி அம்பிகை சமேத நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், தொண்டை நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் 32ல், கூவம், திருஇலம்பையங்கோட்டூர், தக்கோலம், திருவாலங்காடு, திருப்பாச்சூர் ஆகிய திருத்தலங்களுக்கு நடுநாயகமாக விளங்குவது சிறப்பு அம்சமாகும். இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, வரும் 4ம் தேதி கோவிலில் அமைந்துள்ள பொன்னியம்மன், செல்வ விநாயகர், ஆதிகேசவ பெருமாள், நாகேஸ்வர சுவாமி ஆகிய சன்னிதிகளுக்கு, மகா கும்பாபிஷேகம், காலை, 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளது. முன்னதாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு, பூர்வாங்க நிகழ்ச்சி நடந்தது.