காரைக்குடி : காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசித் திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக சித்திரை மாதத்தில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலர்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு மலர் சொரிந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.