நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று (மே 2) யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா இன்று மாலை யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது. நாளை காலை திருக்கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்குகிறது.மே 11-ம் தேதி 9-ம் நாளான்று காலை 8 திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் திருத்தேரில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 13-ம் தேதி வி பெருவிழா நிறைவடைகிறது