புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர் உடனுறை பெரியநாயகி அம்பாள் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் விழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில், சிவபுராணம் கீர்த்தித்திருஅகவல், உள்ளிட்ட 51 வகையான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகங்களை சிவனாடியார்கள் பாடினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.