தென்திருப்பேரை: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 10-ம்நாள் - திருநாளான வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.