வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அழகிய மணவாளப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, அதற்கான மண்டல பூஜைகள் விமரிசையாக நடந்தது.வத்திராயிருப்பு அருகே அர்ஜூணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளதுஇக்கோயில். புதர்மண்டி கிடந்த இக்கோயில், அரசு நிதி மூலம் ரூ .2 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான மண்டல பூஜைகள், நேற்று நடந்தது. காலையில் பூரண கும்பம் வைத்து யாகபூஜைகள் நடந்தன. மூலவரான சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. முடிவில் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் அபிஷேகம் நடந்தது. தனி சன்னதியில் எழுந்தருளிய பத்மாவதி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. காவல் தெய்வமாக எழுந்தருளிய கருப்பசாமி பீடத்திற்கும் யாகபூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் பஜனை வழிபாடு, கோலாட்டம், கும்மி வழிபாடும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக்கமிட்டி நிர்வாகிகள் குமார் கிருஷ்ணன், ராஜாளி, சுந்தர்ராஜன், பக்தசபாவினர் செய்தனர்.