கிருமாம்பாக்கம்: செங்கழுநீர் மாரியம்மன் கோயில் 100-ம் ஆண்டு உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. அதனைத்தொடர்ந்து அன்று காலை 8:00 மணிக்கு சரகை வார்த்தல், புற்று மண் எடுத்தல் கொடியேற்றமும் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான செடல் மற்றம் தேரோட்டம் வரும் 9-ம் தேதி நடக்கிறது. மறுநாள் 10-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், நேற்று இரவு 10:00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றுஞூ கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.