ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ராமானூஜர் அவதார உற்சவத்தில் சேஷ வாகனத்தில் ராமானூஜர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.ஸ்ரீபெரும்புதூரில் ஆதிசேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 25-ம் தேதி ராமானூஜர் அவதார உற்சவம் துவங்கியது. ராமானூஜர் தினமும் காலையிலும்,மாலையிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ,திருவீதி உலா வருகிறார்.இந்நிலையில் எட்டாம் நாளான நேற்று உற்வசர் ராமானூஜம் அலங்கரிக்கப்பட்ட சேஷ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.