நாமக்கல்: நாமக்கல் பெரியசாமி கோவில் சித்திரை திருவிழா நடந்தது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.