விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு திருநகரில் உள்ள ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீலட்சுமி குபேரன் கோவி லில் லட்சார்ச்சனை விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, 7:00 மணி முதல் பகல் 12:00 வரையிலும், மாலை 3:00 மணி முதில் இரவு 8:00 மணி வரையில் லட்சார்ச்சனை நடந்தது. முன்னதாக பகல் 12:00 மணி முதல் 3:00 மணி வரை ஸ்ரீ நவநரசிம்ம ஸத்சங்கம், கோவிந்தபுரம் ஸ்ரீ வெங்கடேச பாகவதர் குழுவினரின் பஜனை நடந் தது. திரளான பக்தர்கள் சாசி தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் வரும் 14ம் தேதி சித்ரா பவுர்ணமியை யொட்டி காலை கோ பூஜை, மகாலட்சுமி யாகம், சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.