பதிவு செய்த நாள்
05
மே
2014
12:05
பேரம்பாக்கம்: களாம்பாக்கம் நாகேஸ்வரர் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பேரம்பாக்கம் அடுத்துள்ள களாம்பாக்கத்தில், பல்லவ மன்னர்களால், கி.பி., 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, மரகதவல்லி அம்பிகை சமேத நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று நாகேஸ்வர சுவாமி கோவிலைச் சுற்றி அமைந்துள்ள பொன்னியம்மன், செல்வ விநாயகர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின், நாகேஸ்வர சுவாமி கோபுர கலசங்களுக்கு, காலை, 10:00 மணிக்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று இரவு, விசேஷ அலங்காரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன்சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பொன்னியம்மன், மரகதவல்லி அம்பிகை சமேத நாகேஸ்வரர் சுவாமி திருவீதி உலா நடந்தது.