சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் விளையாட்டு மாரியம்மன் கோவில் விழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, கோவில் முன் கம்பம் நடப்பட்டு, தினமும் புனிதநீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும் பெண்கள் வழிபட்டு வருகின்றனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனைகளும் நடைபெறுகிறது. 13-ம் தேதி அம்மன் அழைத்தல், 14ம் தேதி பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 15-ம் தேதி காலை பொங்கல் வைத்தல் மற்றும் கம்பம் ஆட்டமும், நடைபெற உள்ளது.