தஞ்சாவூர் : தஞ்சாவூர் மேலராஜவீதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்வநாயகி அம்மனுக்கு பால்குடம், மகாஅபிஷேக விழா நேற்று நடைபெற்றது.முன்னதாக காலை 9 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.