திருநள்ளார் நளன் குளத்தில் மீன்கள் இறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 02:05
காரைக்கால்: திருநள்ளார் நளன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்ததால் குளத்தில் குளிக்கசென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக சனிக்கிழமை தரிசனத்திற்காக திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று நளன் குளத்தில் மர்மமான முறையில் குளத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெரிய மீன்கள் மற்றும் சிறிய மீன்கள் இறந்து கிடந்ததால்.நளன் குளத்தில் நீராடி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுக்குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீரசாமி கூறுகையில்.சனி பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளம் குளத்தில் குளிப்பதற்காக தினம் தண்ணீரை ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர்.தினம் 20 மணிநேரம் மோட்டார் மூலம் தண்ணீரை சுத்தம் செய்யப்படுகிறது.நேற்று அதிகாலையில் மழைபொய்ந்ததால் குளத்தில் உள்ள மீன்கள் வெப்பம் தாங்கமால் மீன்கள் இறந்துள்ளது. இறந்த மீன்களை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நளம் குளத்தில் உள்ள பழைய தண்ணீரை அகற்றிவிட்டு புதிய தண்ணீரை விடப்படும் என்று தெரிவித்தார்.