திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு புதிதாக 3 தேர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 02:05
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு புதிதாக விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 3 தேர்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. காரைக்கால் திருநள்ளர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில் பிரமோற்சவ விழாவில் தங்கத்தால் செய்யப்பட்ட ரிஷிப வாகனம், தங்க காக்கை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கும். ஆண்டுதோறும் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழாவில் தேரோட்டத்தில் இரண்டும் தேர்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.இந்நிலையில் மேலும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட புதிதாக செய்ய 3 தேர் கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டது. இந்த புதிதாக தேர் செய்ய ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.மேலும் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி கூறுகையில்.சனிஸ்வர பகவான் நவகிரக ஸ்தலங்களில் ஒன்று இக்கோவிலில் புதிதாக செய்யப்படும் 3 தேர் பணிகள் நடைபெற்றுவருகிறது.மேலும் வருகிற 2015 ஆண்டு தேர் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.